search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக சட்டமன்ற கூட்டம்"

    கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்று வரும்நிலையில், காலை அமர்வில் வராத 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மதியம் அவைக்கு வந்தனர். #KarnatakaFloorTest #absentMLAs
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இது எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்று வருகிறது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கு வராததால் சந்தேகம் எழுந்தது. அவர்கள் பா.ஜ.க. எம்எல்ஏ ஒருவரின் பிடியில் இருப்பதாகவும் பேசப்பட்டது. பின்னர் அந்த எம்எல்ஏக்களில் பிரதாப் கவுடா பாட்டீல் பேரவைக்கு வந்தார்.

    இந்நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது மற்றொரு எம்எல்ஏ ஆனந்த் சிங்கும் அவைக்கு வந்தார். இதையடுத்து மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். பதவியேற்புக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    காணாமல் போனதாக கூறப்பட்ட 2 எம்எல்ஏக்களையும் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  #KarnatakaFloorTest #absentMLAs
    ×